தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு (2011) ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கோபிநாத் போட்டியிட்டார். அவரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி ஓசூர் மற்றும் அருகில் உள்ள பாகலூர், பேரிகை பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கோபிநாத் எம்.எல்.ஏ., நடிகர் சிரஞ்சீவி உள்பட மொத்தம் 6 பேர் மீது பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தேர்தல் விதிமுறையை மீறியதாக தொடரப்பட்ட இந்த வழக்கு ஓசூர் ஜெ.எம்.1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என கோபிநாத் எம்.எல்.ஏ., நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோபிநாத் எம்.எல்.ஏ.வும், நடிகர் சிரஞ்சீவியும் ஆஜராகவில்லை. இதையடுத்து பிடிவாரண்ட் உத்தரவை நீட்டித்து வழக்கு விசாரணை 2.8.2012-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதற்குள் நடிகர் சிரஞ்சீவி, கோபிநாத் எம்.எல்.ஏ. ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment