இன்றைய இளைஞர்கள் பலரும் உலவிக் கொண்டிருப்பது ஃபேஸ்புக்கில்தான்! சொந்தக் கதை, சோகக் கதையென சகட்டுமேனிக்கு ஸ்டேட்டஸ் போடுவதை ஸ்டேட்டஸாக வைத்திருப்பவர்கள் பலரும் உண்டு!
யாகூ இணையதளம் பிரபலமாக இருந்தபோது பலரும் யாகூவில்தான் வலம் கிடந்தனர். அதேபோல் இப்போது பேசப்படக் கூடிய ஒன்றாக ஃபேஸ்புக் உருவெடுத்திருக்கிறது. ஆனால் இந்தப் பெருமை எத்தனை காலத்துக்குத்தான்? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
யாகூ நிறுவனமானது இப்போது 13 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் லாபத்துலதான் போகிறது என்றாலும் எதிர்பார்த்த லாபம் கிடையாது. இந்த கதிதான் ஃபேஸ்புக்குக்கும் வந்துவிடும் என்கின்றனர்.
ஏன் ஃபேஸ்புக் மேல இந்த பொருளாதார வல்லுநர்களுக்கு கொலை வெறி என்கிறீர்களா? ஃபேஸ்புக் பங்குச் சந்தையில் கால் பதித்தபோது பெருமையாக சொன்னது 42 கோடிப் பேர் செல்போன் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினார்கள் என்று.. சரி பயன்படுத்தினால் என்ன? ஃபேஸ்புக்குக்கு என்ன வருமானம் கிடைத்தது? அதுதான் இப்போது முன் உள்ள கேள்வி.
செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களிடமிருந்து எப்படி வருவாய் பெறுவது என்பதற்காக பல யுக்திகளை அந்நிறுவனம் கையாண்டு வருகிறது. ஆனாலும் என்னவோ ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக்கின் சந்தை மதிப்புதான் தொடர்ந்தும் குறைந்து வருகிறது.
இப்படியே காலந்தள்ளுமேயானால் நிச்சயம் ஃபேஸ்புக் என்ற தளமே இனி ஐந்து அல்லது 8 ஆண்டுகளில் காணாமலே போய்விடும் என்கின்றனர் வல்லுநர்கள்.
No comments:
Post a Comment