பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 15 அமைச்சர்களுக்கு ஊழலில் தொடர்பிருப்பதாக அன்னா ஹசாரே குழுவினர் கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தனர். குறிப்பாக, நிலக்கரி அமைச்சகம் பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஊழல் நடந்ததாக, அத்துறையின் செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:
மன்மோகன் சிங் நல்ல மனிதர் என தொடக்கம் முதலே கூறி வருகிறேன். அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இதுவரை இல்லை. அவருக்கு நேரம் தற்போது சரியில்லாமல் இருக்கிறது. ரிமோட் மூலம் இயக்கப்படுவது போல் அவர் இயங்குகிறார் என கூறியுள்ளார்.
பிரதமர் மீது சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜூலை 1-ந்தேதி ஹசாரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment