மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் இன்று நடத்தப்பட்டன. பீகாரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட அம்மாநில பாரதீய ஜனதா தொண்டர்கள், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் படங்களை ஏந்தியும், அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியும் மோடிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
சமீபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ‘2014-ல் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதசார்பற்ற தலைவர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ எனக் கூறினார்.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முதலில் இவ்வாறு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்த நிதிஷ், அதன் பின்னர் வெளிப்படையாகவே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் மாநிலம் கடந்தும் பாரதீய ஜனதா தொண்டர்களிடையே மோடிக்கு பலமான ஆதரவு இருப்பதை நிதிஷ்குமாருக்கு உணர்த்தவே தாங்கள் இவ்வாறு நடந்துகொண்டதாக, அத்தொண்டர்கள் தெரிவித்தனர்.
மேலும், ‘மோடி சிந்தாபாத்’ போன்ற கோஷங்களையும் அவர்கள் முழங்கினர். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க நிதிஷ்குமார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தனது சொந்த மாநிலத்திலேயே மோடிக்கு ஆதரவு வலுத்து வருவது நிதிஷ்குமாரை கலக்கமடைய செய்துள்ளது.

No comments:
Post a Comment