இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் டெண்டுல்கர் டு சென்சூரிகர் என்ற புதிய புத்தகத்தை, பிசிசிஐ துணை தலைவர் சுதிர் டபிர் வெளியிட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). கடந்த 1989ம் ஆண்டு 16 வயதில் இந்திய அணி்க்குள் நுழைந்த சச்சின், கடந்த 23 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர், அதிக சதங்கள் என்று இவரது சாதனைகள் நீண்ட பட்டியலை கொண்டது.
வலது பேட்ஸ்மேனாக சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த வீரர் என்ற அபூர்வ சாதனையை படைத்தவர். இதனால் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளில் சச்சினுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு.
இந்த நிலையில் சச்சினின் வாழ்க்கை, சாதனைகள், கருத்துகளை கொண்ட புத்தகம் ஒன்றை உள்ளூர் கிரிக்கெட் வீரரான கிரண் மல்ஹேத்ரா என்பவர் எழுதியுள்ளார். இன்று நடைபெற்ற இப்புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவர் சுதிர் டபிர் புத்தகத்தை வெளியிட்டார்.
'டெண்டுல்கர் டு சென்சூரிகர்' என்ற இப்புத்தகத்தில் சச்சினின் ஒவ்வொரு சதங்கள் அடிக்கப்பட்ட இடங்கள், பந்துகளின் எண்ணிக்கை, எந்த அணிக்கு எதிராக அடிப்பட்டது உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் உள்ளன. மேலும் சச்சினை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், மற்ற துறைகளை சேர்ந்தவர்கள் ஆகியோரின் விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் சச்சினை குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சுனில் கவாஸ்கர், பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் ஆகியோரின் விமர்சனங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நூலின் ஆசிரியர் கிரண் மல்ஹோத்ரா கூறுகையில், இந்நூல் விற்பனைக்காக வெளியிடப்பட்டது அல்ல. அன்பளிப்பாக அளிக்கப்படுவதற்காக வெளியிடப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment