அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் இருந்த ஸ்குருடிரைவர் தெரியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது. இதனால், அவனுக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது.
இந்த சம்பவத்தால் ஆச்சர்யமடைந்த ஜங்ரா இரண்டு வாரங்கள் கழித்து டிவிடி பிளேயரில் சிக்கிக்கொண்ட திரைப்பட சிடியை எடுப்பதற்காக திறந்த போது வெறும் கையால் அதன் ஒயர்களை தொட்டுள்ளான். ஏதும் ஆகாததால் திரும்பத்திரும்ப தொட்டுப்பார்த்த அவன் மின்சாரத்தோடு விளையாடத்தொடங்கினான். அன்றுதான் தனக்கு ஏதோ ஒரு சக்தி இருப்பதை புரிந்து கொண்டான். அதன் பின் தொடர்ந்து வேறு வேறு வோல்டேஜூகள் கொண்ட பல்வேறு மின் சாதனங்களை தொட்டுப்பார்த்தான். 110, 220, 440 என்று அவனது மின்சாரத்தை தாங்கும் திறன் அதிகரித்துக்கொண்டே சென்றது.
ஒருநாள், தன்னால் எவ்வளவு மின்சாரத்தைதான் தாங்க முடியும் என்று சோதனை செய்ய விரும்பி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி 11000 வோல்ட் மின்சாரத்தை தொடச்சென்றான். அவனது தாய் உட்பட அங்கு கூடிய கிராம மக்கள் அனைவரும் அவன் தற்கொலை செய்து கொள்வதாக எண்ணி கீழே இறங்கும் படி சத்தம் போட்டுள்ளனர். ஆனால் 11000 வோல்ட் மின்சாரத்தை தொட்ட பிறகும் அவன் உயிரோடு இருப்பதை பார்த்தபின் ஆரவாரம் செய்துள்ளனர்.
கிராமத்தினரால் அதிசய மனிதனாக பார்க்கப்படும் ஜங்ரா இந்த சம்பவத்திற்கு பிறகு வட இந்தியாவில் ஊடகங்களால் பாலிவுட் நடிகரை போல பிரபலமாகியிருக்கிறான். ஆனால் மருத்துவர்களோ இது ஆபத்தென்றும் ஜங்ராவின் செய்கை அவனுக்கு பல்வேறு குறைபாடுகளை உண்டாக்குமென்றும் எச்சரித்துள்ளனர்.
டெஸ்டர், கட்டிங் பிளேயர் என்று எந்த உபகரணங்களும் இன்றி மின் பொருட்களை சரி செய்து வரும் ஜங்ரா தன் வேலைகளுக்காகவோ இந்த சக்தியை பயன்படுத்தியோ இதுவரை பணம் எதுவும் சம்பாதித்ததில்லை.
அரசின் மின்சாரத்துறையில் மேலாளராக பணியாற்றுவதே ஜங்ராவின் கனவாக உள்ளது. சரியான தேர்வுதான், வாழ்த்துக்கள் ஜங்ரா!

No comments:
Post a Comment