ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நாடு முழுவதிலும் உள்ள 2500 நகரங்களில் இலவசமாக அதிவேக வை-பை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஏர்போர்ட், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் தனியார் நெட்வொர்க்குகள் இலவச வை-பை சேவையை வழங்கி வருவதை போல, 2500 நகரங்களில் இச்சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இந்த சேவையை குறிப்பிட்ட நேரம் வரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்துவதற்கு நியாயமான கட்டணம் விதிக்கப்படும்.
இது குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீ வத்சவா, "அடுத்த நிதி ஆண்டிலிருந்து (2015-2016) நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த திட்டத்தை பி.எஸ்.என்.எல். மட்டுமின்றி அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment