நாடு சுதந்திரம் அடைந்து, வரும் 2022வது ஆண்டில் தனது 75 ஆண்டை நிறைவு செய்கிறது. அதனை இலக்காக வைத்து, ‘அனைவருக்கும் வீடு‘ என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைவருக் கும் தண்ணீர், மின்சாரம் இணைப்பு, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்தும் அடங்கிய வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகைக்கு சுமார் ரூ. 22.5 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து விவாதித்து, அதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ மற்றும் அந்த துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் அமைப்புகளும் பங்கேற்கக்கூடிய அனைவ ருக்கும் வீடு‘ திட்டத்தின்படி 6 லட்சம் வீடுகள் டெல்லியிலும், 16 லட்சம் வீடுகள் மும்பையிலும், சென்னை மற்றும் கொல்கத்தாவில் தலா 4 லட்சம் வீடுகளும் கட்டப்படும். மதிப்பீடுகள் முடிந்த பின்னர், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். பிரதமரின் அறிவுறுத்தலின்படி, நகரங்களுக்கும், கங்கை ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கும் இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
2022- க்குள் 2 கோடி வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என இந்தத்திட் டம் முன்மொழிந்துள்ளது. குடிசை வீடுகள், நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகள், வீடு இல்லாதவர்கள், பிழைப்புக்காக நகர் பகுதிக்கு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டவர்களையும் இந்த திட்டம் சென்றடையும். அனைவருக்கும் வீடு என்பது, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களுள் ஒன்று. வீடுகளை கட்டுவதற்கு பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்யுமாறு அதிகாரிகளை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.இந்த கூட்டத்தின் மூலமாக, அனைவருக்கும் வீடு திட்டத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும், அதிக அளவிலான மாற்றங்களும் நடந்துள்ளது.
கூட்டத்தை தொடர்ந்து நடத்துவதன் மூலம், இந்த திட்டமானது இலக்கை அடையும் வகையில் வடிவம் பெறும். இன்று (நேற்று) நடந்த கூட்டத்தில், அனைவருக்கும் வீடு திட்டத்துடைய இறுதி வடிவம் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 4 லட்சம் வீடு
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சென்னையில் 4 லட்சம் வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீடுகளின் முடிவின்படி இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. நகர்புறங்களில் ஆற்றின் ஓரம் உள்ளவர்களுக்கும், குடிசைப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதால், சென்னையில் கூவம் ஆற்றின் கரையோரம் உள்ளவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டிக் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment