அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கூட்டம் வேலூரில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–
அகில பாரத இந்து மகா சபாவினுடைய தலைவர் பண்டித மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்த மத்திய அரசை பாராட்டுகிறது. மேலும் நோதாஜி, வீரசாவர்கர், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரனார் போன்ற அப்பழுக்கற்ற தேச பக்தர்களுக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
ஜனவரி 30–ல் நாடு முழுவதும் நான் ஏன் காந்தியை சுட்டுக்கொன்றேன் என்ற கோட்சேவின் வாக்கு மூலத்தை பிரசுரமாக வெளியிட முடிவு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் 51 இடங்களில் கோட்சே சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை வீரவநல்லூரில் ஜனவரி 30–ல் கோட்சே சிலையமைக்க பூமி பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26–ல் விரசாவர்க்கரின் நினைவு தினத்தினை எல்லா மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடுவது அன்று மாவட்டம் தோறும் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
அயோத்தி வழக்கை விரைந்து நடத்தி, கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டை தடை செய்து காளை மாட்டை காட்சிப்படுத்தும் விலங்காக அறிவித்த மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் பசுவை தேசிய புனித விலங்காக அறிவித்து அதனை பாதுகாக்க வேண்டும். இறைச்சிக்காக பசு வெட்டப்படுவதை தடுத்திட பசுவதை தடைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
திருச்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அகில பாரத இந்து மகா சபா அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment