டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிவில் சர்வதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இலங்கை-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவில் புதிய தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தென் ஆப்பிரிக்க அணி (124 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி (118 புள்ளிகள்) 2-வது இடத்தையும், இங்கிலாந்து அணி (104 புள்ளிகள்) 3-வது இடத்தையும், பாகிஸ்தான் அணி (103 புள்ளிகள்) 4-வது இடத்தையும், நியூசிலாந்து அணி (99 புள்ளிகள்) 5-வது இடத்தையும், இலங்கை அணி (96 புள்ளிகள்) 6-வது இடத்தையும் வகிக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வி கண்ட இந்திய அணி (95 புள்ளிகள்) 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது.
பேட்டிங் தர வரிசையில் இலங்கை வீரர் சங்கக்கரா (909 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்சை (908 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சங்கக்கரா மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
பந்து வீச்சு தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ரையான் ஹாரிஸ் 2-வது இடத்திலும், இலங்கை வீரர் ஹெராத் 3-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர் வரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன், தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர், இந்திய வீரர் அஸ்வின் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.

No comments:
Post a Comment