வரும் 26-ந்தேதி குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வருகிறார். இதையொட்டி பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒபாமா பயணம் செய்ய குண்டு துளைக்காத பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட 'பீஸ்ட்' கார் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்கு மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிளாக்பெர்ரி போனை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் அந்த போனை பயன்படுத்திக் கொள்வார்.
அந்த போனை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:-
உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக கருதப்படும் அதிபர் ஒபாமா பயன்படுத்தும் போனில் பாஸ்வேர்டை தாண்டி அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளன. அமெச்சூர், புரொபசனல் ஹேக்கர்கள், உளவு ஏஜென்சிகள் ஆகியவை அதிபர் ஒபாமா எங்கு செல்கிறார்? எப்போது செல்கிறார்? அவர் என்ன பேசுகிறார்? யார் யாரிடம் பேசுகிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாத பல வசதிகள் உள்ளன.
சுமார் 10 ஆண்டுகளாக பிளாக்பெர்ரி மொபைலை மட்டுமே ஒபாமா பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால், 2008-ல் அமெரிக்க அதிபரான பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக பிளாக்பெர்ரியை விட்டுவிட்டு அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சி தயாரித்து வழங்கும் செக்ட்ரா எட்ஜ் செக்யூர் மொபைலுக்கு மாறிவிட்டார். ஆனால், பிளாக்பெர்ரி மீது ஒபாமாவுக்கு இருந்த செண்டிமெண்ட் மற்றும் பிரியத்தை பார்த்த அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சி உடனடியாக செக்ட்ரா மொபைலை பிளாக்பெர்ரி மொபைலாக மாற்றியது. பிரத்யேகமாக செக்யூர் வாய்ஸ் என்ற சாப்ட்வேரையும் அதில் இன்டஸ்டால் செய்து கொடுத்தது. இந்த சாப்ட்வேரை அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சியே உருவாக்கியது.
இந்த போனில் கேம்ஸ், செல்பி கேமிரா எல்லாம் இருக்காது. அதேபோல் இதிலிருந்து மெசேஜ் எதுவும் அவ்வளவு எளிதாக அனுப்பவிட முடியாது. பல பாதுகாப்பு என்கிரிப்ஷன் பிராசஸ்களுக்கு பிறகே அனுப்ப முடியும்.
10 நம்பர்களுக்கு மட்டுமே அதிகபட்சமாக இதிலிருந்து கால் செய்ய முடியும். அதுவும், இதே போன்ற பிளாக்பெர்ரி போனுக்கு மட்டுமே கால் செய்யலாம். பொதுவாக, ஒபாமாவின் மனைவி, துணை அதிபர் ஜோ பிடன், செய்தித்துறை செயலாளர் உள்ளிட்ட 10 நபர்களுக்கே இந்த மொபைல் வழங்கப்பட்டிருக்கும்.
அதேபோல் ஒபாமாவின் பிளாக்பெர்ரி அமெரிக்க உளவு அமைப்பு அமைத்துள்ள செக்யூர் பேஸ் ஸ்டேஷனில் மட்டுமே கனெக்ட் ஆகும். ஒபாமா எங்கெல்லாம் செல்கிறாரோ அதை தொடர்ந்து கண்காணித்து வருவதே இந்த பேஸ் ஸ்டேஷனின் வேலையாகும். வெள்ளை மாளிகையிலுள்ள கம்யூனிகேஷன்ஸ் ஏஜென்ஸியின் அனுமதியை பெற்ற பின்பே கால்கள் கனெக்ட் செய்யப்படும். சாட்டிலைட் மூலமாக நெட்வொர்க் லிங்க் செய்யப்பட்டிருக்கும்.

No comments:
Post a Comment