Wednesday, January 14, 2015

கார்பொரேட் கம்பெணிகளுடன் போட்டி போடும் குரு ராம்தேவ்வின் வருட வருமானம் !

வருஷத்துக்கு 2000 கோடி!! கார்பொரேட் கம்பெணிகளுடன் போட்டி போடும் சாமியார்…!! ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யோகா குரு ராம்தேவ். இவர் யோகா, ஆயுர்வேதம், பாலிடிக்ஸ், விவசாயம்னு பல துறைகளில் பிரபலமானவர். டி.வி. நிகழ்ச்சிகளிலும், யோகா பீடத்திலும் யோகா சொல்லித் தருகிறார்.

இவருக்கு எப்படி இவ்வளவு வருவாய் வருதுன்னு யோசிக்குறீங்களா. இவர் டி.வி.ல வர்ரது, யோகா கிளாஸ் நடத்துறது மட்டும் இல்ல. யோகா மூலமா ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்யும் பிஸ்னசும் செய்கிறார்.
இவரோட பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா ட்ரஸ்ட் ஆகியவை இவருடையது தான். இவரோட யோகா பீடம் மற்றும் யோகா ட்ரஸ்ட் மூலமா சத்துமாவு, சோப்புகள், ஷாம்பு, தோல் பூச்சு கிரீம்கள், பிஸ்கட்டுகள், நெய், ஜூஸ், தேன், மசாலா பொருட்கள், சர்க்கரை, கடுகு எண்ணெய், பேஸ்ட் ஆகியவற்றை தயாரித்து விற்கப்படுது.

இந்தப் பொருட்கள் மூலமா இவரோட பதஞ்சலி உற்பத்தி நிறுவனத்துக்குக் கடந்த ஆண்டு 1200 கோடி ரூபாய் ஈட்டி இருக்குது. இதே நிறுவனம், இந்த நடப்பு நிதியாண்டில, சுமார் 2000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கு அப்படின்னு சொல்லப்படுது.

கடந்த அண்டைவிட இந்த ஆண்டு சுமார் 67 சதவீதம் அதிகமா சம்பாதிச்சு இருக்கு இந்நிறுவனம். இது மட்டுமில்ல, கடந்த 2012ம் ஆண்டில், இந்தியா முழுவதும் 150-200 பதஞ்சலி ஆயுர்வேத நிலையங்கள் இருந்ததாம்.
ஆனால், இப்போ இது பல்கிப் பெருகி, 4000 கடைகளாகி விட்டதாம். இந்தியாவில் வெளிநாட்டு கார்பொரேட் நிறுவனங்களுக்கே போட்டி போடுற அளவுக்கு வகை தொகை இல்லாம வளர்ந்துக்கிட்டு போகுது பாபாஜியோட பதஞ்சலி நிறுவனம்.

வெளிநாட்டு பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்திட்டு இருக்கிற நம்மூர் மக்களுக்கு, பாபாஜியோட இந்த ஆயுர்வேதப் பொருட்களிடத்தில நல்ல வரவேற்ப்பு இருக்கு. அதோட, பாபாஜியோட பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பது, இந்திய உற்பத்தியாளர்களுக்கு நல்ல தொரு நம்பிக்கைய தருவதா அமைஞ்சிருக்கு.

No comments:

Post a Comment