டெல்லி மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக தனியார் டி.வி. சேனல் ஒன்று ஆம் ஆத்மி மற்றும் பா.ஜனதா தலைவர்கள் இடையேயான விவாதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான படப்பிடிப்பு துக்ளகாபாத்தில் உள்ள டி.ஏ.ஏ. பூங்காவில் நேற்று நடந்தது.
இந்த விவாதத்தின் போது, இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதைத் தொடர்ந்து பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த துக்ளகாபாத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் சாகி ராமின் கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இதனால் ஆம் ஆத்மி தொண்டர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரியின் தூண்டுதலின் பேரில் தான் காருக்கு தீ வைக்கப்பட்டது என்று புகார் செய்தனர்.
அதேநேரம் ரமேஷ் பிதுரி கூறுகையில், பா.ஜனதா மீது குற்றம் சுமத்தவேண்டும் என்பதற்காகவே காருக்கு ஆம் ஆத்மியினர் தீ வைத்தனர். அவர்கள் தொடங்கி வைத்த மோதலில் தான் பா.ஜனதா தொண்டர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றார். உண்மையில், ஆம் ஆத்மி வேட்பாளரின் காருக்கு தீ வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment