கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற ’மகாபஞ்சாயத்து’ இன்று நடைபெற்றது.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு உ.பி.மாநிலம், மீரட் மாவட்டம் பிரம்மபுரி பகுதியில் சிலை அமைக்கப்படும். அந்த சிலை வைக்கப்படும் இடத்தில் கோயில் ஒன்றும் கட்டப்படும் என அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் தேசியப் பொதுச் செயலாளரான ஆச்சார்யா மதன் என்பவர் அறிவித்திருந்தார். இங்குள்ள சாரதா சாலையில் இந்த கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே, கோட்சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்த உத்தரப்பிரதேசம் மாநில நவ் நிர்மான் சேனா, இவ்விவகாரம் தொடர்பாக அனைத்து தரப்பு மக்களின் கருத்தினை கேட்கும் வகையில் 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற மகாபஞ்சாயத்துக்கு இன்று ஏற்பாடு செய்தது.
உத்தரப்பிரதேசம் மாநில நவ் நிர்மான் சேனா தலைவர் அமித் ஜானி தலைமையில் நடைபெற்ற இந்த மகாபஞ்சாயத்தில் கோட்சேவுக்கு கோயில் கட்டுவதை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து, கோட்சேவுக்கு கோயில் கட்டுவது தொடர்பாக பிரதமரின் நிலைப்பாடு என்ன? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என அமித் ஜானி குறிப்பிட்டார்.
கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து வரும் 11-ம் தேதி மீரட் நகர் சாரதா சாலையில் உள்ள அகில பாரத இந்து மகாசபை அலுவலகத்தின் முன்னர் தொண்டர்களுடன் திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபடவும், உண்ணாவிரதம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு சென்று இது தொடர்பாக மனு அளிப்போம். கோட்சேவுக்கு கோயில் கட்டும் விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக ஒரு பொது விளக்கம் அளிக்கும்படி பிரதமரை கேட்டுக் கொள்ளப் போவதாகவும் அமித் ஜானி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment