அவுரங்காபாத் அருகே பெற்ற மகளையே கற்பழித்த தந்தை விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்தின் பைஜீபூரா பகுதியைச் சேர்ந்தவர் மிர்சா சலீம் (45). இவருக்கு 2 மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. அதில் 10 வயது மூத்த பெண்ணை தக்சஷீலா நகர் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அடிக்கடி அழைத்துச் சென்றார்.
இதனால் சந்தேகமடைந்த சிலர், மிர்சா சலீமை கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது மிர்சா சலீம் தனது மகளையே கற்பழித்துள்ளார். இந்த தகவல் மிர்சா சலீமின் இரண்டாவது மனைவிக்கு தெரியவந்துள்ளது.
அவர் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். மனைவி காவல் துறையினரிடம் புகார் அளித்ததை அறிந்ததும் மிர்சா சலீம் அங்கிருந்து தலைமறைவானார். பின்னர் அவர் விஷம் குடித்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment