இன்று நம்மில் பல பேர் கணக்கு என்றாலே அது என்னமோ வேண்டாத ஒன்றாக தான் பார்க்கிறார்கள். அப்படி பட்டவர்களை கணக்கு பக்கம் திரும்பி பார்க்க செய்வதற்கு என்றே ஒரு இணையத்தளம் உள்ளது.
பல்வேறு விதமான கணித சமன்பாடுகளுக்கு ஒரு நொடியில் விடைகள் தரும் இணையத்தளம் இது . ஒரு மைல் தூரம் என்பது எத்தனை கிலோ மீட்டர் ? எத்தனை அடிகள் சேர்ந்தது ஒரு மீட்டர்? எத்தனை கிலோகிராம் சேர்ந்தது ஒரு பவுண்டு? என்பது போன்ற தகவல்களை இதில் பெறலாம். இதுபோன்ற போன்ற சாதாரண கணக்குகள் மட்டுமின்றி கடினமான கணகீடுகளுக்கான தீர்வையும் இந்த இணையத்தளம் மூலம் பெற முடியும். நியூட்டன் விதி, இயங்கு விதி போன்ற விதிகளுக்கான சமன்பாடிகளையும் இந்த தளத்தின் மூலம் பெற முடியும்.
பூமியின் எடை, ஒளியின் வேகம் போன்ற பொதுவான தகவல்களையும் இங்கு காணலாம். பேலும் கணக்கியல் சமன்பாடுகளை சரிபார்க்கவும் முடியும். உதாரணமாக 2 கிலோ = 2000௦௦ கிராம் என்று அளித்து சாரிபார்க்க முடியும். இப்படி ஏராளமான கணக்கீடுகளை மேற்கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்களுக்கும் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வரை அனைவருக்கும் உதவும் வகையில் இந்த இணையத்தளம் உள்ளது.
No comments:
Post a Comment