விஜய்யின் தம்பி என்ற அறிமுகத்தோடு திரைத்துறையில் நுழைந்த, விஜயின் சித்தப்பா மகன் விக்ராந்த். இவர் விஜய்யுடன் சண்டை போட தயாராகத்தான் இருக்கிறார். இது நிஜத்துல இல்லீங்க படத்துலதான் விஜயுடன் ஒரு படத்திலாவது வில்லனாக நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் விக்ராந்த். ஆனால் அதற்கு முன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் 'சட்டப்படி குற்றம்' படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விக்ராந்த்.
மீண்டும் இந்திக்கு போனார் அசின்!
நடிகை அசின் மீண்டும் இந்திப்படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். கஜினி படத்தின் இந்தி ரீ-மேக் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு போனவர் நடிகை அசின். இந்தி கஜினி அங்கு சூப்பர், டூப்பர் ஹிட் ஆனதால் வேறு மொழிப்படங்களில் நடிக்க மறுத்து, பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். தமிழ்ப் பட தயாரிப்பாளர்களுக்கு நேரம் ஒதுக்க மறுத்ததுடன், தமிழ் படங்களை தவிர்த்து வந்தார். இந்தியில் ஒரு ரவுண்டு வந்துவிடவேண்டும் என்ற அசினின் கனவு, அவரது அடுத்த படமான லண்டன் ட்ரீம்ஸ் படத்திலேயே பிசுபிசுத்துப் போனது. லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் வாங்கிய அடியால், அலறி அடித்துக் கொண்டு தமிழில் ஏதாவது ஒரு படத்திலாவது நடித்து இங்காவது பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், காவலன் படத்தில் கமிட் ஆனார்.
அதற்கு முன் இந்திப்பட சூட்டிங்கிற்காக இலங்கை சென்ற அசின் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்ததால், காவலன் படத்துக்கும் சர்ச்சைகள் கிளம்பியது. ஒருவழியாக படம் ரீலிஸ் ஆகி வெற்றியும் பெற்று விட்டது. எதிர்பார்க்காமல் கிடைந்த இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்று பேட்டியளித்தார். இந்நிலையிீல் அம்மணிக்கு இந்தி படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு தானாக தேடி வந்திருக்கிறது. ஹவுஸ்புல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வந்த வாய்ப்புதான் அது. முதல் பதிப்பில் அக்ஷய்குமார், தீபிகா படுகோனே, லாரா தத்தா நடித்திருந்தனர். ஹவுஸ் புல் 2 படத்திலும் அக்ஷய் குமார்தான் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் கமிட் ஆகி விட்டாராம். மீண்டும் பாலிவுட் பட வாய்ப்பு தேடி வந்ததை நினைத்து பெருமிதத்துடன் இருக்கிறார் அசின்.
இந்திப்படம் தயாரிக்கும் சுசிகணேசன்!
"விரும்புகிறேன்" தொடங்கி "கந்தசாமி" வரை அடுத்தடுத்து அரை டஜன் தமிழ் படங்களை இயக்கிய மணிரத்னத்தின் சிஷ்யர் சுசிகணேசன், திருட்டுபயலே இந்தி பதிப்பை இயக்குவதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார்.
அடுத்தடுத்து இரண்டு இந்திப்படங்களை இயக்கவுள்ள சுசி இரண்டு இந்திபடமும் முடிந்தபின் தான் கோலிவுட் திரும்பி தமிழ்படம் எடுப்பேன் என சபதமே ஏற்றிருக்கிறாராம்! அந்த இரண்டு இந்திப்படங்களில், ஒன்றின் இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவர் இயக்குநர் சுசிகணசேன் என்பதும் குறிப்பிடத்தக்கது! ஆமாம் சுசி தமிழில் சொந்தப்படம் எப்போ எடுக்கப்போறீங்க...?
No comments:
Post a Comment