அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சமுதாய நெட்வொர்க் இணையத்தளமான டுவிட்டர் இணையத் தளத்தில் என்னுடைய பெயரில் நான் எழுதுவது போல தகவல்கள் வெளியாவதாக என் கவனத்துக்கு வந்துள்ளது. டுவிட்டர் இணையத் தளத்தில் நான் எதுவும் எழுதுவது இல்லை என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திட்டமிட்டு யாரோ ஆள் மாறாட்டம் செய்து, என் பெயரில் டுவிட்டரில் எழுதுகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம். என் பெயரில் டுவிட்டரில் எழுதுபவர்கள் மீது காவல் துறை சைபர்- கிரைம் பிரிவு மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.
எனவே டுவிட்டரில் எனது பெயரில் வரும் தகவல்களை எனது நண்பர்கள், கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள், தோழமை கட்சியினர் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்.
No comments:
Post a Comment