நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் மதுரையில் இன்று திடீர் உண்ணாவிரதம் இருக்கிறார்.
நடிகரும், நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக்,
‘’மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவேண்டும்,
மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று கோரியும், மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், மதுரை நான்குவழிச்சாலையில் உள்ள கீழகுயில்குடி இடத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.
இதற்காக கீழகுயில்க்குடியில் மிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டத்தில் தேவர் இன ஓட்டுக்களை பெறுவதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கார்த்திக்கை தயார் படுத்துகிறாரா? அதற்காக அவரின் உத்தரவுப்படிதான் கார்த்திக் உண்ணாவிரதம் இருக்கிறாரா? என்று பேசப்படுகிறது.

No comments:
Post a Comment