அதிமுக -தேமுதிக கூட்டணியில் ஏற்பட்ட தொகுதிப்பங்கீட்டு சிக்கல் தீர்ந்தது.
நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு ஆரம்பித்து விடியற்காலை வரை தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் ஆகியோருடன் ஜெயலலிதா இடைவிடாது பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்றும் பேச்சுவார்த்தை நீடித்தது. நேற்று மாலை போயஸ் தோட்டத்தில் 4 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை விடியற்காலை 5 மணிக்கு முடிந்தது.
13 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியே வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், ‘’அதிமுக -தேமுதிக தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது.
விஜயகாந்த் ஒப்புதல் பெற்றபின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment