திரையுலகின் பிரபல காதல் ஜோடிகளில் ஒன்றாக வலம்வந்த செல்வராகவனும் சோனியா அகர்வாலும் திருமணமாகி ஓராண்டு முடிவதற்கு முன்பே பிரிந்து போனார்கள். பிரிந்த பிறகும் செல்வாவுடன் நட்புறவு பாராட்டிவந்தாராம் சோனியா. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை மனம் விட்டுப் பாராட்டியிருக்கிறார். அதன் பிறகு செல்வராகவனின் தந்தை கஸ்தூரிராஜாகூட “சோனியா எனது மகள்” என்று மீடியாவிடம் செண்டிமெண்ட் பிழிந்திருந்தார். இதற்கிடையில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சோனியா சொல்லியிருந்தார்.
மணவிலக்கு பெற்று விலகியிருந்தாலும் அவ்வப்போது செல்வராகவனுடன் பேசி வந்தாராம் சோனியா. ஆனால் இப்போது அதுவும் கட்! கீதாஞ்சலியுடன் செல்வராகவனுக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்ட உடனேயே போனில் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம் சோனியா.
இது ஒருபுறம் இருக்க, சோனியாவின் சோகம் என்னவென்றால், மணவிலக்குகிற்கு முன்பு அன்-அஃபீஷியலாக செட்டில் செய்வதாகச் சொன்ன தொகையைப் பற்றி இன்னும் வாய் திறக்கவில்லையாம் செல்வா தரப்பில்!

No comments:
Post a Comment