அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவதற்கு முன்பாக 160 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டதால், அதிர்ச்சி அடைந்த கூட்டணி கட்சிகள் தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
அதிமுகவின் தன்னிச்சை போக்குக்கு முடிவு கட்ட வேண்டும் என, கூட்டணி கட்சித் தலைவர்கள் கொதித்தனர். அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க சென்றார்.
இதனை அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தா.பாண்யனுடன் நேரடியாக போனில் பேசியதாகவும், இதையடுத்து மூன்றாவது அணி யோசனையை விட்டுவிட்டதோடு, மற்ற கட்சித் தலைவர்களையும் சமாதானம் செய்ததுடன், அவர்களை அதிமுக தலைமையை சந்திக்க தா.பாண்டியன் ஏற்பாடு செய்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தா.பாண்டியனின் இந்த செயலால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவர் மீது வருத்தத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
veliye payirai maitha kathai
ReplyDelete