கூட்டணி கட்சியினருக்காக உழைப்பதில் வைகோ திறமையானவர் என, பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்த தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று முடிவு செய்து உள்ளார். இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூட்டணி கட்சியினருக்காக உழைப்பதில் வைகோ திறமையானவர். அவர் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சியினரை தனது கட்சிக்காரர்களைப் போல் பாவித்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்வார்.
பழுத்த அரசியல்வாதியான அவர் விரும்பினால் பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து தேர்தலை
சந்திக்கலாம். அவ்வாறு அவர் வரும் பட்சத்தில் அவரை அன்புடன் வரவேற்க தயாராக இருக்கிறோம். இது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 25 ந்தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை முன்னுறுத்தி உள்ளது. இது மக்கள் எப்போதும் கையேந்தி நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment