அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட சிக்கலைத்தொடர்ந்து ம.தி.மு.க.அந்த அணியில் இருந்து விலகியதுடன் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வைகோ அறிவித்தார். இந்தநிலையில் நேற்று அவர் பாளையில் உள்ள அவரது தம்பி வீட்டிற்கு வந்தார். அங்கு உடல்நலமில்லாத அவரது தாய் மாரியம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு நள்ளிரவு சென்றார். இன்று காலை அவர் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
ம.தி.மு.க. நிலைபாடு குறித்து தனியார் தொலைக்காட்சியில் விபரமாக பேசிவிட்டேன். 2001-ல் திருச்சியில் நடந்த ம.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று இயற்கையாகவே நடந்து விட்டது. தமிழகத்தில் இனி தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ம.தி.மு.க. அமையும்.
இந்த முறை ம.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் வெளியேஇருந்து கவனிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்த தேர்தல் புறக்கணிப்பு குறித்ததில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment