2008ஆம் ஆண்டில் வெளிவந்து அமோக வெற்றி பெற்ற 'அபோகலிப்டோ ' இயக்குநர் ஸ்கைல் ராங்கிங் இயக்கியிருக்கும் பிரமாண்டமான படம் 'இன்ஃபெஸ்டேசன்'(INFESTATION). இப்படம் தமிழில் 'ஆயிரம் பூச்சிகள்' என்ற தலைப்பில் மொழி மாற்றம் செய்து மார்ச் 4ஆம் தேதியன்று வெளியாகிறது.
காட்டுவாசிகளைப் பற்றிய படம் எடுத்து மாபெரும் வெற்றிப்பெற்ற இயக்குநர் இம்முறை நகரத்து பின்னணியில் விஞ்ஞானத்தை கையில் எடுத்து வியக்க வைக்கும் அனிமேஷனின் மூலம் அசத்தியிருக்கிறார்.
விஞ்ஞானி ஒருவர் தான் உருவாக்கிய ஒரு பூச்சியை வைத்து உலகை அதிர வைக்க நினைக்கிறார். அந்த பூச்சிகளை புழுக்கள் கடிக்க, அவை பெரிய உருவங்களாக மாறி மனிதர்களை குறிவைக்கிறது. அப்படி பூச்சிகள் கடிக்கப்பட்ட மனிதர்கள் பெரிய பூச்சிகளாக மாறி மற்றவர்களையும் பூச்சிகளாக மாற்றி காட்டுக்குள் உள்ள ஒரு குகையில் அடைத்து வைக்கிறார்கள். அந்த கூட்டத்தில் மாட்டிகொண்ட ஹீரோவும், ஹீரோயினும் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக பிரமிக்க வைக்கும் விதத்தில் படமாக்கியுள்ளார்கள்.
ஸ்ரீ ராகவேந்திர பிலிம் சர்கியூட் சார்பில் என்.முரளியும், ஹன்சா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள்.

No comments:
Post a Comment