கட்சி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட 160 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் கூட்டணிக் கட்சிகளை ஆத்திரத்தில் ஆழ்த்தியது. அவர்கள் கோரியிருந்த தொகுதிகளுக்கெல்லாம் சேர்த்தும் அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து அவர்கள் மூன்றாவது அணி மிரட்டல் விடுத்ததையடுத்து, கூட்டணிக் கட்சிகளை நேற்று முதல் சந்தித்துப் பேசி தொகுதிகளை ஒதுக்கி வருகிறார். தேமுதிகவுக்கான தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக பேச்சு நடத்தி வரும் ஜெயலலிதா, அடுத்து மதிமுகவுடனும் பேச்சு நடத்தவுள்ளார்.
இந் நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பலரும் மனு தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறவில்லை.
இதனால் இப்போதைய அதிமுக பட்டியலில் இடம் பெற்றுள்ள யாரும் மனு தாக்கல் செய்ய வேண்டாம். திங்கள்கிழமை புதிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இந்த 11 மணி டூ 1 மணி வரையிலான நேரம் ஜோசியர் ஒருவர் குறித்துக் கொடுத்த நேரம் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment