தேசிய அரசியலில் மோடி கவனம் செலுத்துவது குறித்து அமெரிக்கா கவலைப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், "மோடி ஒரு சிறந்த நிர்வாகி" என்று 2006 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரி மைக்கேல் எஸ். ஓவன்,தமது நாட்டுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காந்திநகரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை தடுக்க வேண்டும் என்றார். அமெரிக்க தூதரக அதிகாரியின் கருத்து குறித்து கேட்டபோது, மும்பையில் அமெரிக்கத் தூதர் ஓவனை சந்தித்தேன்.அப்போது குஜராத் பற்றி இருவரும் பேசினோம்.
அப்போது, அவரிடம் "எங்களுக்கு யோசனை செய்யாதீர்கள். நீங்கள் எத்தகைய மனித உரிமை மீறல்களை செய்கிறீர்கள் என்பது தெரியும்" மனித உரிமைகள் குறித்து இந்தியாவுக்கு அமெரிக்கா உபதேசம் செய்யக்கூடாது என்று கூறினேன். அந்த பேச்சு விவரங்கள் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே அனுப்பப்பட்டுள்ளது.
நான் ஊழல் செய்யாதவன் என்பது இப்போதும் அமெரிக்கா அறியும்.விக்கிலீக்ஸ் தகவல்கள் இந்திய அரசு மற்றும் குஜராத் வளர்ச்சி ஆகிய இரு முகங்களை காட்டுவதாக அமைந்துள்ளது" என்று மோடி மேலும் கூறினார்.
No comments:
Post a Comment