திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ., இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது இவருடன் வந்த அ.தி.மு.க., தொண்டர்கள் மீது செருப்பு வீசப்பட்டதால் .அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் மோதும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் இன்று வேட்பு மனுத்தாக்கல் ஜெ., தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். 11 மணி அளவில் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு தங்களுடைய தொண்டர்கள் புடைசூழ வந்தார். இவர் முன்பு செல்ல இவரது பின்னால் அ.தி.மு.க., தொண்டர்கள் சாரை,சாரையாக வந்து கொண்டிருந்தனர்.
இவர் மனுத்தாக்கல் செய்ய வரும்போது ஜெ., வை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஆனந்தும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நேருவும், தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தனர். இந்நேரத்தில் இருதரப்பு தொண்டர்கள் குவிந்திருந்ததால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜெ.., மனுத்தாக்கல் செய்ய கலெக்டர் ஆபீஸ் வளாகத்திற்குள் சென்ற போது, தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வினரை நோக்கி செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பும் பலத்த குரலில் கத்தியபடி மோதும் சூழல் ஏற்பட்டது. வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் தொற்றிக்கொண்டது இருதரப்பினர் நடத்திய கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி மண்டை உடைந்தது. ரத்தம் சொட்ட, சொட்ட, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தடியடி நடந்தது ஏன்? : தடியடி நடந்ததற்கான காரணம் குறித்து அங்கு முகாமிட்டிருக்கும் எமது நிருபர் கூறியதாவது: ஜெ., முதலில் மனுத்தாக்கல் செய்ய வந்தார். இவருடன் 5 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. அமைச்சர் நேருவும், ஆனந்தனும் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்தபோது குறிப்பிட்ட காரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். இதனால் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நரேத்தில் அஙகிருந்த அ.தி.மு.க., தொண்டகள் ஒரு புறம் ஜெ., வாழ்க என கோஷமிட இவர்களும் எதிர்கோஷமிட பரபரப்பு நிலவியது இந்நேரத்தில் அ.தி.மு.க,.- தி.மு.க., தொண்டர்கள் இருதரப்பினரும் செருப்பு மற்றும் கல்வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். ஜெ., மனுத்தாக்கல் முடிந்து புறப்பட்டு செல்லும்போதும் இரு தரப்பு தொண்டர்கள் மோதிக்கொள்ளும் சூழல் இருந்தது. இதனையடுத்தும் மீண்டும் ஒரு முறை தடியடி நடத்தப்பட்டது. தொண்டர்கள் கல்வீச்சில் காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மண்டை உடைந்தது.
மனுத்தாக்கல் முடிந்து செல்லும்போது ஜெ,.வை அணிவகுத்து வந்த வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
No comments:
Post a Comment