தான் சட்டசபையில் நுழையக் கூடாது என்பதற்காக, அரசியல் கட்சியினருக்கு ஸ்டர்லைட் நிர்வாகம் ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
ஸ்டர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஸ்டர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் நான் ஆஜராகி வாதாடி வருகிறேன்.
இதனால் சட்டமன்ற உறுப்பினராக வைகோ தேர்ந்தெடுக்கப்படுவதை தடுக்க ஸ்டர்லைட் ஆலை நிர்வாகம் பல வழிகளில் முயற்சி செய்கிறது. இதற்காக அரசியல் கட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. நான்
சொல்லவில்லை பத்திரிகை சொல்கிறது. நான் சொல்லவில்லை நம்பதகுந்த வட்டாரங்கள் சொல்லுகின்றன.
சட்டசபை தேர்தலில் பங்கேற்பது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். தேர்தலில் பங்கேற்காமல் விட்டது பதுங்குவதற்காக அல்ல. பாய்வதற்குத்தான். தேர்தலில் பங்கேற்பது இல்லை என்ற முடிவை மதிமுக மாவட்டச் செயலாளர் உள்பட கட்சித் தொண்டர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment