விஜயகாந்த்துக்கு மீண்டும் விருத்தாசலத்தில் போட்டியிட துணிச்சல் இல்லை என, அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிவராஜ் கூறியுளள்ôர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.சிவராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 1984ம் ஆண்டு சிவராஜ் தன் 28வது வயதில் முதன் முதலாக ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன எஸ்.சிவராஜ் அந்த தொகுதியில் 4 தடவை எம்.எல்.ஏ. ஆக இருந்த சிறப்பு அவருக்கு உண்டு. தற்போது அவர் 5வது தடவையாக எம்.எல்.ஏ. ஆகும் முயற்சியுடன் களம் இறங்கி உள்ளார்.
விஜயகாந்தும், பலம் பொருந்திய காங்கிரஸ் வேட்பாளரும் மோதுவதால் ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் களம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் கூறியதாவது:
நான் இந்த மண்ணின் மைந்தன். ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் மீண்டும் என்னை தேர்ந்து எடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளேன். விஜயகாந்த் ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்தாலும் கூட மீண்டும் விருத்தாசலத்தில் போட்டியிட அவருக்கு துணிச்சல் இல்லை. அங்கிருந்து நழுவி ரிஷிவந்தியம் பக்கம் வந்ததன் மூலம் அவரது பலவீனம் தெரிகிறது.
ரிஷிவந்தியம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மூலை, முடுக்குகள் பற்றிய விபரம் எல்லாம் எனக்கு தெரியும். ஒவ்வொரு பகுதியின் தேவை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். விஜயகாந்துக்கு இது பற்றியெல்லாம் தெரியாது.
அவர் வெளியில் இருந்து வந்து இருக்கிறார். சொந்த ஊரில் நான் போட்டியிடுவது எனக்குள்ள பெரிய பலமாகும். ரிஷிவந்தியம் தொகுதியில் எந்த ஊருக்குச் சென்றாலும் என்னைத் தெரியும். தொகுதி முழுவதும் மக்கள் என் மீது நல்ல மரியாதையும் அன்பும் வைத்து இருக்கிறார்கள். தி.மு.க., பா.மக., விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் கூட்டணி பலமும் ஆதரவும் எனக்கு உள்ளது. எனவே விஜயகாந்த்தை எதிர் கொள்வதில் நான் கவலைப்படவில்லை. மக்கள் ஆதரவுடன் அவரை எதிர் கொள்வேன்.
ரிஷிவந்தியம் தொகுதியில் பல பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளேன். சாலைகளை பழுது பார்த்துள்ளேன். எனவே மக்கள் என்னை நம்புகிறார்கள். கடவுள் துணையும் இருப்பதால் நிச்சயம் விஜயகாந்தை வெல்வேன் என்றார்.
No comments:
Post a Comment