தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என்பதை தன் வாயால் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்ல கூட மனம் வராத ஜெயலலிதா ஹைலைட்ஸ் மட்டும் படிக்கிறேன் என்று மக்களை இழிவுபடுத்துகிறார் என, மு.க.ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் செய்து பேசுகையில்,
கலைஞர் அவர்களால் கதாநாயகி என்று கூறப்பட்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்து தானும் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டதாக கூறி கொள்கிறார்.
பொதுவாக ஒரு கட்சி பொது தேர்தலை சந்திக்கும் போது அந்த கட்சியின் தலைவர் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவினை நியமித்து அவர்களும் மக்களின் தேவை என்ன, தாய்மார்களின் தேவை என்ன என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்படுவது தான் தேர்தல் அறிக்கை.
அப்படி தி.மு.கழகத்தின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் அமைந்த அந்த தேர்தல் அறிக்கையை தலைவர் கலைஞர் இந்த வயதிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அறிவிப்புகளை செய்து நாட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கையினை அறிமுகப்படுத்தினார். ஆனால், அடுத்த 5 வருடம் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஜெயலலிதா, தனது கட்சியின் சார்பில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற அந்த தேர்தல் அறிக்கையை முழுமையாக செய்தியாளர்களிடம் கூட படித்துக் காட்டவில்லை. தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என்பதை தன் வாயால் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்ல கூட மனம் வராத ஜெயலலிதா ஹைலைட்ஸ் மட்டும் படிக்கிறேன் என்று மக்களை இழிவுபடுத்துகிறார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment