ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பது என்பது சாத்தியமே இல்லை. இதை தன் வாயாலேயே பல முறை கூறியிருக்கிறார் கமல். எங்களுக்கு தனித்தனியாக வியாபாரம் இருக்கு. சேர்ந்து நடிக்கிற போது இரண்டு பேருக்கும் தர வேண்டிய சம்பளம், தயாரிப்பு செலவு இவையெல்லாம் கணக்கு போட்டுதான் அந்த முடிவுக்கு வர முடியும். அப்படி வந்தாலும் அதுக்கேற்ற கதை வேணுமே என்றெல்லாம் குழப்பியடித்தார்.
ஆனால் இந்த வியாபார விஷயங்களுக்குள் அடைபட்டு நிற்காத ஒரு படத்தில் இருவரும் நடிக்கப் போகிறார்கள். அது இன்னும் சில வாரங்களில் நடக்கப் போகிறது. பையனு£ர் அருகே திரைப்பட கலைஞர்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கியிருக்கிறார் முதல்வர். இங்கு பிரமாண்டமான திரைப்பட ஸ்டுடியோவும் கட்டப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா விரைவில் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில்தான் கமலும், ரஜினியும் இணைந்து நடிக்கும் ஒரு குறும்படத்தை திரையிடப் போகிறார்கள். இந்த படத்தை இவ்விரு ஜாம்பவான்களை தமிழ் திரையுலகிற்கு தந்த கே.பாலசந்தரே இயக்கப் போகிறார். கதை வசனத்தை எழுதப்போகிறாராம் கலைஞர்.
ஆறு கோடி தமிழர்களும் விரும்பும் ஒரே படம் இதுவாகதான் இருக்கும் போலிருக்கிறது.

No comments:
Post a Comment