சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று போயஸ் கார்டனில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் துணை முதல்வர் முக ஸ்டாலின்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் முக ஸ்டாலின்.
முதல்கட்டமாக தங்களது கூட்டணிக் கட்சி தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ஸ்டாலின். அடுத்த கட்டமாக, அரசியலில் இல்லாவிட்டாலும், வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்ற இமேஜ் உள்ள ரஜினியை சந்தித்துள்ளார்.
போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு சென்னை மாநகர மேயர் மா சுப்பிரமணியத்துடன் சென்ற முக ஸ்டாலின், ரஜினிக்கு பொன்னாடை போர்த்தி, அவரது ஆதரவைக் கேட்டார்.
ரஜினியும் ஸ்டாலின் வெற்றி பெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, சால்வை அணிவித்தார். பின்னர் சிறிது நேரம், அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் பேசினர்.
நேற்று முன் தினம் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment