வீரநாராயணமங்கலம் அருகே ஓட்டு சேரிக்க வந்த அமைச்சர் சுரேஷ் ராஜனை ஊருக்குள் விட மக்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் அமைச்சர் சுரேஷ் ராஜன் போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்று மாலை அவர் வீரநாராயணமஙகலம் பகுதியில் ஓட்டு சேகரித்தார். அப்போது தாழக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்டமேட்டுக் காலனியில் ஓட்டு சேரிக்கச் சென்றார்.
அமைச்சர் ஓட்டு சேரிக்க வந்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வெற்றி பெற்றபின் இதுவரை எங்கள் பகுதிக்கு எதுவும் செய்யவில்லை. ஓட்டு கேட்க மட்டும் எங்கள் ஊருக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டு அவரை ஊருக்குள் விட மறுத்தனர். மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அவர் அப்பகுதியை விட்டு நைசாக நழுவினார். இதனால் அமைச்சருக்கு எதிராக அப்பகுதி மக்கள் கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மக்களை சமாதானப்படுத்தினர். அமைச்சரை ஊருக்குள் வரவிடாமல் திரும்பிப் போகச் செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment