நடிகர் சோ-வும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டார்கள். அரசியல் வானில் ரஜினிகாந்த் உதிர்த்துவிட்டு போகும் இறக்குக்கு கூட ஏவுகணை எபெக்ட் கொடுப்பார்கள் அல்லவா? இந்த சந்திப்பையும் வெவ்வேறு கலர் கண்ணாடிகள் கொண்டு கவனிக்க ஆரம்பித்திருக்கிறது அரசியல் உலகம்.
அந்த சந்திப்பில் இருவரும் பேசியது என்ன என்பதை பற்றி விசாரித்தோம். நமக்கு கிடைத்த தகவல்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. ரஜினி சோவை சந்தித்ததே ராணா படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியமைப்புக்காகதானாம். புராண கதையை பின்னணியாக கொண்டு ஒரு எபிசோட் இடம் பெறுகிறதாம் படத்தில். இதை நன்கு கற்றுணர்ந்தவர் சோ என்பதால்தான் அவரை சந்தித்தாராம் ரஜினி.
இந்த சந்திப்பு முடிந்ததும் இருவரும் தனித் தனி காரில் புறப்பட்டு எங்கேயோ சென்றார்கள் என்றும் கூறப்பட்டது. அவர்கள் போன இடம், கே.எஸ்.ரவிகுமாரின் இல்லத்திற்குதான் என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ரஜினியை சந்தித்தார். தேர்தலில் நிற்பதையட்டிய மரியாதை நிமித்த சந்திப்புதானாம் இது.
No comments:
Post a Comment