சட்டசபை தேர்தலை புறக்கணிக்கும் ம.தி.மு.க. வின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சி கூறி உள்ளது. இதுபற்றி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சி திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலாவை அமுல்படுத்த நினைக்கிறார்கள். இது ஜன நாயகத்தை குழி பறிக்கும் செயல் ஆகும். அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. எங்களுக்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்கள் கூறி இருக்கிறது. இது தமிழ்நாட்டில் மக்கள் வேலையில்லாமல் அதிகமாக உள்ளனர் என்பதை உறுதிபடுத்துகிறது.
ம.தி.மு.க. தேர்தலை புறக்கணிப்பதாக வைகோ அறிவித்துள்ளார். அவர் தனது முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும். மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் அவர் இடம் பெற வேண்டும். கூட்டணியில் சேர அவரை அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment