சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் வாய்ஸ் கொடுப்பதில்லை என்று ரஜினிகாந்த் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வந்த நிலையில் அவரை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அசன் முகம்மது ஜின்னா வாழ்த்து பெற்று ஆதரவும் கேட்டார்.
தேர்தலுக்குத் தேர்தல், ரஜினி வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆரம்பத்தில் வாய்ஸ் கொடுத்த ரஜினி பின்னர் அதை விட்டு விட்டார். சமீப காலமாக தேர்தலில் யாருக்கும் அவர் ஆதரவு கொடுப்பதில்லை.
இந்த தேர்தலிலும் கூட அவர் யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்றே கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவரை சோ சந்தித்துப் பேசியதால் அதிமுகவுக்கு ஆதரவாக அவர் வாய்ஸ் கொடுப்பாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில் ரஜினிகாந்த்தை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜின்னா சந்தித்துப் பேசியுள்ளார். அவரிடம் வாழ்த்தும், ஆசியும் பெற்றுள்ளார்.
ஜின்னாவைத் தொடர்ந்து மற்ற திமுக வேட்பாளர்களும் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெறுவார்களா, குறிப்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment