திருச்சியில் திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
கலைஞர் யாரையும் பழிவாங்க விரும்பமாட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் யார் யாரெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள். அவரை எதிர்த்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டார்கள். பொடா சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டார்கள்.
18 மாதங்கள் உள்ளே வைக்கப்பட்டார் வைகோ. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைஞரால் வளர்க்கப்பட்டவர்தான். தன்னை மாணிக்க கல்லாக உயர்த்திவர் கலைஞர் என்று மேடைகளில் பேசியவர் வைகோ. அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் அவரின் நிலைமை என்ன. அவரின் அரசியல் நிலைமையே இன்று கேள்விக் குறியாகி விட்டது. புதைக்குழியிலே இன்றைக்கு தள்ளிவிட்டார்.
அதற்கு வைகோ பேசுகிறார். குற்றச்சாட்டு. வெளிப்படையான குற்றச்சாட்டு. அரசியலில் இருந்து ஓரம்கட்டுவதற்காக, ஒழிப்பதற்காக ஸ்டெர்லைட் என்கிற நிறுவனம் என்னை எதிர்க்கிறவர்களுக்கு ஆயிரம் கோடி நிதி தந்திருக்கிறது என்று வைகோ கூறுகிறார். வைகோ அவர்களே இந்த மேடையில் இருந்து கேட்கிறேன். நேர்மை இருந்தால், மனசாட்சி இருந்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியது யார் என்று வெளிப்படையாக சொல்லுங்கள். நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள். நாட்டுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஆயிரம் கோடி ரூபாயை வாங்கியது யார். அரசியலில் இருந்து உங்களை ஓரங்கட்டுவது யார். அரசியல் வாழ்விலிருந்து உங்களை ஒதுக்குவது யார். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
No comments:
Post a Comment