ராணா படத்தில் அசின், வித்யா பாலன் நடிப்பதாக வந்த செய்திக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அதேபோல அவர்கள் நீக்கம் என்பதும் தவறான செய்தி, என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.
இதுகுறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க ரூ.100 கோடி செலவில் ராணா படம் தயாராகிறது. இதில் நிறைய நடிகர்கள் நடிக்கின்றனர். ரஜினி ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.
வேறு எந்த நடிகையையும் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் அசினிடம் பேசியதாகவும், எதிர்ப்பு கிளம்பியதால் அவரை நீக்கி விட்டதாகவும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை.
அவரை இந்தப் படத்துக்கு நாங்கள் யோசிக்கவே இல்லை. வித்யாபாலனையும், சில பிரச்சினைகளால் நீக்கியதாக வந்த செய்தியும் வதந்திதான். இந்தப் படத்தில் நடிக்குமாறு அவரிடம் நாங்கள் பேசவே இல்லை.
அடுத்து ரேகா விவகாரம். இதுவும் முழுக்க முழுக்க கற்பனேயே.
கதாநாயகிகளிடம் பேச்சு நடத்தி வருகிறோம். தீபிகா படுகோனேயை தவிர வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. ராணா படம் 17-ம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதைக் களம் கொண்டது.
படப்பிடிப்பு ஒரு வருடம் நடக்கும். ஈராஸ் மற்றும் ஹரா பட நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ரஜினி மகள் சௌந்தர்யா இதில் டெக்னிக்கல் டைரக்டராக பணியாற்றுகிறார்.
இந்தப் படம் தொடர்பாக தேவையில்லாத கற்பனைகளைத் தவிர்க்க, ஒவ்வொரு கட்டத்திலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து செய்திகளைத் தரத் திட்டமிட்டுள்ளோம். எனவே அதிகாரப்பூர்வ செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்", என்றார்.
படம் தொடர்பாக கே.எஸ்.ரவிக்குமாரே இப்படி அடிக்கடி செய்திகளைக் கொடுத்தால் வதந்திகளைக் குறைக்கலாமே...!

No comments:
Post a Comment