வேட்பாளர் பிரச்சினையில் சிக்கிய ஹசீனாசையத் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
நான் தி.நகரில் அழகுக்கலை பயிற்சி நிலையம் மற்றும் விமான பணிப் பெண்களுக்கான பயற்சி மையம் நடத்தி வருகிறேன். எனக்கு சமூக சேவையில் அதிக ஈடுபாடு உண்டு. ஏராளமான ஏழை பெண் களுக்கு இலவச சுய தொழில் பயிற்சி அளித்து வருகிறேன். எனக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியின் அரசியல் செயல் பாடுகள் மிகவும் பிடிக்கும். இதனால் இளைஞர் காங்கிரசில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டேன்.
சென்னையில் ஏராளமான இளைஞர்கள்- இளம்பெண்களை இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாக சேர்ந்தேன். இதனால் எனக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார். இளைஞர் காங்கிரசை ஊக்குவிக்க சிறுபான்மையினத்தை சேர்ந்த எனக்கு எம்.எல்.ஏ. சீட் தருவேன் என்று ராகுல்காந்தி கூறி இருந்தார். அதன்படி எனக்கு கிருஷ்ணகிரி தொகுதி கிடைத்தது.
கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் மாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டதற்கு தங்கபாலுதான் காரணம். நான் தீவிர ப.சிதம்பரம் ஆதரவாளர். ஆனால் சிலர் நான் தங்கபாலு ஆதரவாளர், அவரது மனைவி ஜெயந்தி நடத்தும் மெகா டி.வி.யில் அழகுக்கலை நிகழ்ச்சி நடத்துவதாகவும் கூறி உள்ளனர். நான் ஒருபோதும் தங்கபாலுவை ஆதரித்ததில்லை. அவரது மெகா டி.வி.யில் எந்த நிகழ்ச்சியும் நடத்தவில்லை. நான் தூர்தர்ஷன், ஜெயா டி.வி. போன்றவற்றில்தான் அழகுக்கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தேன்.
இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் பிரபலமானேன். மெகா டி.வி.யில் நான் அழகுக்கலை நிகழ்ச்சி நடத்தியதாக வதந்தி பரப்பியதே தங்கபாலு ஆதரவாளர்கள்தான். சதி செய்து என்னை தங்கபாலு ஆதரவாளர் போல் வெளிப்படுத்தி கிருஷ்ணகிரியில் எனக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டனர். பின்னர் தங்கபாலு என்னை மாற்றி விட்டு அவரது ஆதரவாளரான மக்பூல்ஜானை வேட்பாளராக அறிவித்தார். தங்கபாலுவின் நடவடிக்கைகள் அனைத்தையும் காங்கிரஸ் மேலிடம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ராகுல் காந்தியிடம் இதுபற்றி புகார் கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment