அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்துக்காக திருச்சியில் முகாமிட்டுள்ளார். அவரை நடிகர் விஜய்யின் தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் திருச்சி புறப்பட்டு சென்றார். ஜெயலலிதாவை ஏற்கனவே இரண்டுமுறை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்து பேசினார்.
தேர்தல் பற்றி இருவரும் ஆலோசித்தனர். விஜய் நடித்த “காவலன்” படத்தை திரையிட தியேட்டர்கள் கிடைக்காத நிலைமை குறித்தும் விளக்கினார். விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்கும் என்று பேசப்பட்டது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வில்லை.
இந்த நிலையில் மூன்றாவது தடவையாக ஜெயலலிதாவும் எஸ்.ஏ.சந்திர சேகரனும் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இச்சந்திப்புக்கு பின் அதிரடியான முடிவுகளை எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விஜய் பிரசாரத்தில் குதிப்பாரா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. அதற்கு எஸ்.ஏ.சந்திர சேகரன் பதில் அளிக்கிறார். ஒருவேளை பிரசாரத்தில் ஈடுபட்டால் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் பொதுக் கூட்டங்களில் மட்டும் பேசுவார் என தெரிகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகரன் திறந்த வேனில் தெருத்தெருவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியை விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரிக்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜெயலலிதா- எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்புக்கு பின் வெளியாகிறது.
No comments:
Post a Comment