சென்னையில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வி்த்தியாசத்தில் வீழ்த்தியது. உலகக்கோப்பை கிரிக்கெட் "பி" பிரிவு போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் சேவக் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம்இறங்கிய இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. காம்பீர் 22 ரன்களும், டெண்டுல்கர் 2 ரன்களும், கோக்லி 59 ரன்களும், யுவராஜ் சிங் 113 ரன்களும், தோனி 22 ரன்களும், ரெய்னா 4 ரன்களும், யூசுப் பதான் 11 ரன்களும், ஹர்பஜன் சிங் 3 ரன்களும், ஜாகிர் கான் 5 ரன்களும், முனாப் படேல் ஒரு ரன்னும் எடுத்தனர். ஆஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் ராம்பால் 5 விக்கெட்களையும், ரஸ்சல் 2 விக்கெட்களையும், சமி மற்றும் பிஸ்ஹோ இருவரும் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதன் பின்னர் களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 43 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பாக டெவோன் ஸ்மித் 81 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் சார்பில் ஜாகிர் கான் 3 விக்கெட்டுகளும், அஸ்வின், யுவராஜ் தலா 2விக்கெட்டுகளும், ஹர்பஜன், சுரேஷ் ரெய்னா தலா 1 விக்கெட் வீழ்த்தினார். இந்தியாவின் யுவராஜ்சி்ங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியா "பி" பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தது. இதனால் காலிறுதியில் "ஏ" பிரிவில் மூன்றாம் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.
No comments:
Post a Comment