""அ.தி.மு.க., கூட்டணிக்கு ஜெயலலிதா அழைத்தாலும், இணைய மாட்டோம். மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடாது,'' என, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில்சம்பத் தெரிவித்தார்.
மதுரையில் ம.தி.மு.க., புறநகர் சார்பில் தேர்தல் நிதி, அவரிடம் வழங்கப்பட்டது. அவர், நிருபரிடம் கூறியதாவது:அ.தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகள், ஒரு எம்.பி., சீட் வழங்குவதாக கூறப்படுகிறதே?.அ.தி.மு.க., எங்களிடம் பேசவில்லை. கூட்டணிக்கு ஜெயலலிதா அழைத்தாலும், இணைய மாட்டோம்.
மூன்றாவது அணிக்கு வாய்ப்புள்ளதா?மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை.விஜயகாந்த்துடன் ம.தி.மு.க., மூன்றாவது அணி அமைக்குமா?விஜயகாந்த்திடம் இணைய முடியாது.
ம.தி.மு.க., தனித்து போட்டியிடுமா?தொண்டர்களின் ஒரு சொட்டு வியர்வையைக்கூட இழக்க ம.தி.மு.க., விரும்பவில்லை. இதுவரை அவர்களுக்காக உழைத்தோம். இனி எங்களுக்காக உழைப்போம். தேர்தலில் போட்டியில்லை.
இதனால், தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்களா? இப்போது தான் உற்சாகமாக உள்ளனர். தமிழகத்தில் இருப்பது அரசியல் கட்சிகள். ம.தி.மு.க., மட்டும் தான் இயக்கம். வைகோ தமிழகத்தின் பிரபாகரன். எங்களுக்கு புதிய வாசலை திறந்து விட்ட ஜெயலலிதாவுக்கு கோடி நன்றி. இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட செயலாளர் வீர. தமிழ்செல்வன் உடனிருந்தார்.
No comments:
Post a Comment