திருமண ஆசைகாட்டி, துணை நடிகையிடம் 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, தலைமறைவாகியுள்ள சினிமா பைனான்சியரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர் ஜவஹர்லால் நேரு தெருவில் வசிப்பவர் சந்திரசேகர். இவரது மகள் சாய்பிரியா(36). சினிமா துறையில் துணை நடிகையாக உள்ளார். தாட்பூட் தஞ்சாவூர், பேரின்பம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த ஸ்ரீராம்சர்மா சினிமாவில் பைனான்சியராக உள்ளார். இவருக்கும், சாய்பிரியாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டது. சாய்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக அவரது பெற்றோரிடம் ஸ்ரீராம்சர்மா சம்மதம் பெற்றதை அடுத்து, கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அதன்பின் சாய்பிரியா பெற்றோரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் ஸ்ரீராம்சர்மா வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமண செலவை தானே பார்த்துக் கொள்வதாக கூறி, மேலும் 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். தன் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கான முன்பணம் செலுத்தியுள்ளார். கடந்த 21ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திருமண ஆசை காட்டி, 25 லட்சம் ரூபாய் பெற்ற ஸ்ரீராம்சர்மா தலைமறைவாகிவிட்டார். திருமணம் நின்று போன நிலையில், இது குறித்து சாய்பிரியா வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருமண நாளுக்கு முன்பாக சாய்பிரியாவை போனில் தொடர்பு கொண்ட ஸ்ரீராம்சர்மா, தன்னை போலீஸ் தேடுவதாகவும் திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கூறியதாக தெரிகிறது. இவ்வழக்கை விசாரிக்கும் போலீசார், தலைமறைவாகியுள்ள ஸ்ரீராம்சர்மாவை தேடி வருகின்றனர்.
இன்றைய சினிமா செய்திகளை படிக்க இங்கே செல்லவும் ...
சினிமா துரையில் இப்படியும் ஏமாறுவார்களா.. ஏமாற்றுவார்களா? ம்ம்ம்ம்
ReplyDelete