பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத்தரும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த தகவலை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் `இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்' சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார்.
அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது,
’’ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்துவிடுவார்கள். கடினமாக உழைக்கிற மக்கள் அவர்கள்.
அந்த மக்களுக்கு இயற்கை தொடர்ந்து இன்னல்களை கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், தியானம்-பிரார்த்தனை மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.
ஜப்பானிய மக்கள் மிகவும் கட்டுக்கோப்பானவர்கள். கடமை தவறாதவர்கள். அங்கு சுனாமி வந்தபோது, ஒரு ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், பயணிகளிடம் `நம் நாட்டை சுனாமி தாக்கியிருக்கிறது. என்றாலும் நான் கடமையில் இருந்து தவறமாட்டேன்' என்று கூறி, தொடர்ந்து தனது கடமையை செய்திருக்கிறார்.
இன்னொரு இடத்தில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள். சுனாமி தாக்கியதும் அவர்கள் சிதறி போனார்கள். சுனாமி அடங்கியபின் மீண்டும் அவர்கள் அதே வரிசையில் நின்று பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இது போன்ற கட்டுக்கோப்பும், கடமை உணர்வும்தான் ஜப்பானியர்களின் மிக சிறந்த குணம்.
ஜப்பானுக்கு வரும்படி என்னை, அந்த நாட்டின் பிரதமரும், சில முக்கியஸ்தர்களும் அழைத்திருக்கிறார்கள். ஜப்பானிய மக்கள் மீண்டும் சகஜ நிலையை அடைவதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் - பிரச்சினையை தீர்க்க முயல்வதுதான் ஒரு நாட்டின் பிரதமரின் கடமை..அதை விடுத்து சின்மாக்கூத்தடிகளை வர சொல்கிறாராம்..என்ன கேனத்தணாம நியூஸ் இது..அவன் சொன்னா இதை உடனேய நம்ம்பிடறதா?
ReplyDelete//அந்த மக்களுக்கு இயற்கை தொடர்ந்து இன்னல்களை கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், தியானம்-பிரார்த்தனை மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன் //
ஜப்பான் மக்களை இதுபோன்ற கேவலப்படுத்தும் வார்த்தை ஏதாவது இருக்கிறதா? சுறுசுறுப்புக்கும் உழைப்புக்கும் பெயர்பெற்றவர்களை, தியானத்தின் மூலம் சகஜ நிலையை அடைந்து விடுவார்கள் என்று சொல்வது அவர்களை கேவலப்படுத்தும் சொல்தான்..