வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி 24.03.2011 அன்று திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் அதிகாரி குணசேகரனிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இதுவரை ஐந்து தேர்தல்களை சந்தித்துள்ளார். 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலைத் தவிர, நான்கு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
1989ல் முதன் முதலாக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈரோடு மாவட்டம், காங்கயம் தொகுதியில், 1991ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சுகவனம் 9,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில், 2002ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2006 தேர்தலில் மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதாவை எதிர்த்து, தி.மு.க., சார்பில், ஆனந்த் போட்டியிடுகிறார்.
No comments:
Post a Comment