பாஜகவில் இருந்த நடிகர் எஸ்.வி. சேகர் அதிமுகவுக்கு மாறினார். அவரை மயிலாப்பூரில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா .
அதிமுகவில் தனக்கு மதிப்பில்லை என்று கூறி திமுகவுக்கு சாதகமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தபடியே திமுககாரராக செயல்பட்டு வந்தார்.
இதையடுத்து அவரை அதிரடியாக கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இருப்பினும் தனது எம்.எல்.ஏ. பதவியை விடாமல் பிடித்துக் கொண்டார்.
பின்னர் இவர் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கம்ப்யூட்டர் மூலம் ராகுல் காந்தியைத்தொடர்பு கொண்டேன் நேரில் பார்க்கச் சொன்னார் என்று கூறி ராகுல் காந்தியை சந்தித்தார் எஸ்.வி.சேகர்.
பின்னர் காங்கிரஸில் இணைந்தார்.
ப.சிதம்பரம் கோஷ்டி மூலமாக இவர் காங்கிரஸில் போய்ச் சேர்ந்ததால் தங்கபாலு தரப்பு காட்டத்துடனேயே இருந்தது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாப்பூரில் போட்டியிட டிக்கெட் கேட்டிருந்தார் எஸ்.வி.சேகர்.
தமிழக காங்கிரஸில் விருப்ப மனு தாக்கல் செய்த முதல் நபர் எஸ்.வி.சேகர்தான்.
ஆனால் எதிர்பாராத வகையில் தனது மனைவிக்கு மயிலாப்பூர் சீட்டை வாங்கி விட்டார் தங்கபாலு. இதை எதிர்பார்க்காத எஸ்.வி.சேகர் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.
தற்போது காங்கிரஸ் தரப்பில் திருப்பூர் தெற்கு, ராமநாதபுரம், பூந்தமல்லி ஆகிய மூன்று தொகுதி வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் இதில் எந்த சீட்டும் சேகருக்கு தரப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தியில் இருக்கும் எஸ்.வி.சேகரிடம், காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவேண்டும் என்று கேட்டிருக்கிறார்களாம்.
உட்கார சீட்டு இல்லை; நின்னுக்கிட்டு பிரச்சாரமா? என்ன கொடுமைங்க என்று புலம்பித்தள்ளுகிறாராம் எஸ்.வி.சேகர்.
காங்கிரஸில் கலாட்டா காமெடிக்குப் பஞ்சமில்லை.இனி
ReplyDeleteஎஸ்வி சேகர் அழுது கொண்டே சிரிப்பதாகக் காண்பித்துக் கொள்ள வேண்டியதுதான்!