திருவனந்தபுரம்:"தனக்கு எந்தவித அசையும், அசையா சொத்துக்களும் இல்லை' என, வேட்புமனு தாக்கலின் போது சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில், கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.கேரளா முதல்வர் அச்சுதானந்தன், மலம்புழா சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சொத்து தொடர்பாக அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனக்கு எந்தவித அசையும் மற்றும் அசையா சொத்துக்களும், பூர்வீக சொத்துக்களும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
கையில் ரொக்கம் 3,000 ரூபாய், வங்கி டிபாசிட்டாக 80 ஆயிரத்து 295 ரூபாய் மட்டும் உள்ளது. 2009-10ம் ஆண்டு தாக்கல் செய்த வருமானவரி கணக்கில் மொத்த வருமானமாக மூன்று லட்சத்து 43 ஆயிரத்து 994 ரூபாய் என காட்டப்பட்டுள்ளது.இவரது மனைவி வசுமதிக்கு, ஆலப்புழா மாவட்டம் பரவூரில் 1982ல் 18 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட 10 சென்ட் நிலம், அதன் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். 100 கிராம் தங்க நகையின் மதிப்பு ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய். கையில் ரொக்கம் 10 ஆயிரம் ரூபாய், வங்கி டிபாசிட் ஐந்து லட்சத்து 70 ஆயிரத்து 635 ரூபாய், கைரலி "டிவி' சேனலை நடத்தும் மலையாளம் கம்யூனிகேஷன் பங்குகள் மதிப்பு 5,000 ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment