உங்களால் மறக்க முடியாத விஷயம் ஒன்று சொல்லுங்களேன் என்று சினிமாக்காரர்களிடம் கேள்வி கேட்கிற நிருபர்களுக்கு கட்டாயம் வாய்த்திருக்கும் இந்த அனுபவம். மறக்க முடியாத விஷயம் என்றால் பட்டென்று வினாடிக்குள் சொல்ல வேண்டுமல்லவா? ஆனால் மண்டையை பிய்த்துக் கொள்வார்கள். அது... வந்து... என்னன்னா... என்று யோசித்து யோசித்துதான் அந்த மறக்க முடியாத (?) விஷயத்தை நினைவுக்கு கொண்டு வருவார்கள்.
ஆனால் பிரபுதேவா அப்படியல்ல. கேட்டவுடன் சொல்ல ஆரம்பித்தார். நான் மும்பையில் கவனித்த விஷயம் அது. கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். சிக்னலில் நிற்கும்போது ஒரு பிச்சைக்காரர் ஒவ்வொரு காராக சென்று கதவை தட்டி தனது பிச்சை பாத்திரத்தை நீட்டிக் கொண்டிருந்தார். அப்படியே என் காருக்கும் வந்தார்.
சரக்கென்று கையிலிருந்த பாத்திரத்தை கீழே போட்டுவிட்டார். கைதவறி கீழே விழுந்திருக்குமோ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் எனக்கெதிரே செம ஸ்பீடாக ஒரு ஆட்டம் போட்டார். அது நான் ஒரு படத்தில் ஆடிய அசத்தலான ஆட்டம். அதை அப்படியே என் முன்னால் அவர் ஆட ஆட எனக்கு வியப்பு. அதற்குள் சிக்னல் விழ, அவருக்கு எதுவுமே கொடுக்க முடியவில்லை என்னால். காரை நகர்த்த வேண்டிய கட்டாயம். இப்பவும் அவருக்கு உதவி செய்ய முடியாமல் போச்சே என்ற நினைப்பு விரட்டிக் கொண்டேயிருக்கிறது என்றார் பெரும் கவலையுடன்.
No comments:
Post a Comment