அதிமுக வேட்பாளர்களின் புதிய பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.
இதில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். புதிய பட்டியல் விவரம்:
முன்னதாக கூட்டணிக்குக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை லவட்டிவிட்டு, பின்னர் அவர்களது எதிர்ப்பால் அதில் பல தொகுதிகளைத் திருப்பித் தந்துவிட்ட அதிமுக, தனது வேட்பாளர் பட்டியலை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார் ஜெயலலிதா.
160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதா, அதில் இப்போது பல தொகுதிகளை மிரட்டல் விடுத்த
கூட்டணி கட்சிகளுக்கு தந்துவிட்டார்.
இதனால் முதலில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 160 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் புதிய அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.
ஆனால், தேமுதிகவுடன் சிக்கல் நீடித்ததால் இன்றாவது இந்தப் பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்ததது.
இது போக முதல் பட்டியலில் உள்ளவர்களில் யார் யார் பெயர் காணாமல் போகப் போகிறதோ.. யாருக்கு தொகுதி மாறப் போகிறதோ என்ற கவலையில் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலரும் ஆழ்ந்து போயிருந்தனர்.
இந் நிலையில் ஒரு வழியாக இன்று பிற்பகலில் புதிய பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். முதல் பட்டியலை தனக்கே தெரியாமல் மன்னார்குடி வகையறா தான் வெளியிட்டதாக கூட்டணிக் கட்சிகளுக்கு நொண்டி சாக்கு சொல்லி நகைப்புக்கு உள்ளானார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், இப்போதைய அதிமுக பட்டியலில் இடம் பெற்றுள்ள யாரும் மனு தாக்கல் செய்ய வேண்டாம். திங்கள்கிழமை புதிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த 11 மணி முதல் 1 மணி என்பது ஒரு ஜோசியர் குறித்துக் கொடுத்த நேரமாம்.
இதில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். புதிய பட்டியல் விவரம்:
- ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
- பொன்னேரி தனி - பொன். ராஜா
- திருவள்ளூர் - பி.வி. ரமணா
- பூந்தமல்லி - மணிமாறன்
- ஆவடி - அப்துல் ரஹீம்
- அம்பத்தூர் - வேதாச்சலம்
- மாதவரம் - வி.மூர்த்தி
- திருவொற்றியூர் - குப்பன்
- ஆர்கே நகர் - வெற்றிவேல்
- கொளத்தூர் சைதை துரைசாமி
- வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
- திரு.வி.க.நகர் தனி - வ.நீலகண்டன்
- ராயபுரம் - ஜெயக்குமார்
- துறைமுகம் - பழ. கருப்பையா
- ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி
- அண்ணா நகர் - கோகுல இந்திரா
- சைதாப்பேட்டை - செந்தமிழன்
- தியாகராய நகர் - வி.பி.கலைராஜன்
- மயிலாப்பூர் - ராஜலட்சுமி
- வேளச்சேரி- எம்.கே. அசோக்
- சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
- ஸ்ரீபெரும்புதூர் - மொளச்சூர் பெருமாள்
- பல்லாவரம் - தன்சிங்
- தாம்பரம் - .டிகே.எம்.சின்னையா
- திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
- செய்யூர் தனி - வி.எஸ்.ராஜி
- மதுராந்தகம் தனி - கணிதா சம்பத்
- உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
- காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
- அரக்கோணம் தனி - சு.ரவி
- காட்பாடி - அப்பு என்கிற ராதாகிருஷ்ணன்
- ராணிப்பேட்டை - முஹம்மத்ஜான்
- ஆற்காடு - ஆர்.சீனிவாசன்
- வேலூர் - டாக்டர் வி.எஸ். விஜய்
- வாணியம்பாடி - கோவி. சம்பத்குமார்
- ஜோலார்ப்பேட்டை - கே.சி.வீரமணி
- திருப்பத்தூர் - கே.ஜி.ரமேஷ்
- ஊத்தங்கரை தனி மனோரஞ்சிதம் நாகராஜ்
- பர்கூர் - கிருஷ்ணமூர்த்தி
- கிருஷ்ணகிரி - கேபி முனுசாமி
- பாலக்கோடு - கே.பி. அன்பழகன்
- பாப்பிரெட்டிப்பட்டி - பி.பழனியப்பன்
- திருவண்ணாமலை - எஸ்.ராமச்சந்திரன்
- கீழ்ப்பெண்ணாத்தூர் - அரங்கநாதன்
- கலசப்பாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- போளூர் - ஜெயசுதா ளட்சுமிகாந்தன்
- செய்யார் - முக்கூர் சுப்பிரமணியன்
- வந்தவாசி தனி - செய்யாமூர் குணசீலன்
- மைலம் - கே.பி.நாகராஜன்
- திண்டிவனம் தனி - டாக்டர் அரிதாஸ்
- வானூர் தனி - ஜானகிராமன்
- விழுப்புரம் - சி.வி.சண்முகம்
- உளுந்தூர்ப்பேட்டை - குமரகுரு
- சங்கராபுரம் - ப.மோகன்
- கள்ளக்குறிச்சி தனி - பா.அழகுவேல்
- ஆத்தூர் தனி - எஸ்.மாதேஸ்வரன்
- ஏற்காடு - செ.பெருமாள்
- ஓமலூர் - பல்பாக்கி கிருஷ்ணன்
- எடப்பாடி - கே.பழனிச்சாமி
- சங்ககிரி - விஜயலட்சுமி
- சேலம் மேற்கு - ஜி.வெங்கடாஜலம்
- சேலம் - தெற்கு செல்வராஜ்
- வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
- ராசிபுரம் தனி - தனபால்
- நாமக்கல் - கேபிபி பாஸ்கர்
- குமாரபாளையம் - பி.தங்கமணி
- ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம்
- மொடக்குறிச்சி - ஆர்.என். கிட்டுச்சாமி
- தாராபுரம் தனி - கே.பொன்னுச்சாமி
- காங்கேயம் - எஸ்எஸ்என் நடராஜ்
- பெருந்துறை - தோப்பு வெங்கடாச்சலம்
- பவானி - பி.ஜி.நாராயணன்
- அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணீதரன்
- கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
- உதகமண்டலம் - புத்தி சந்திரன்
- மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்
- அவினாசி தனி - ஏ.ஏ கருப்பசாமி
- திருப்பூர் வடக்கு - எம்.எஸ்.எம். ஆனந்தன்
- பல்லடம் - பல்லடம் கே.பி. பரமசிவம்
- கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி
- கோவை வடக்கு - தா.மலரவன்
- தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி
- கோவை தெற்கு - சேலஞ்சர் துரை
- சிங்காநல்லூர் - ஆர். சின்னச்சாமி
- கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
- பொள்ளாச்சி - முத்துக்கருப்பண்ணசாமி
- உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி ஜெயராமன்
- மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
- பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு
- ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்பிரமணி
- நத்தம் - இரா.விசுவநாதன்
- வேடசந்தூர் - ச.பழனிச்சாமி
- அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
- கரூர் - வி.செந்தில்பாலாஜி
- கிருஷ்ணராயபுரம் தனி - எஸ்.காமராஜ்
- குளித்தலை -பாப்பா சுந்தரம்
- மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
- திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
- திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
- மணச்சநல்லூர் - டி.பி.பூனாட்சி
- முசிறி - என்.ஆர்.சிவபதி
- துறையூர் தனி - டி. இந்திரா காந்தி
- பெரம்பலூர் தனி - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
- அரியலூர் - துரை மணிவேல்
- ஜெயங்கொண்டம் - பா. இளவழகன்
- நெய்வேலி - எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்
- கடலூர் - மு.சி. சம்பத்
- குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இராஜேந்திரன்
- புவனகிரி - செல்வி ராமஜெயம்
- காட்டுமன்னார் கோவில் தனி- என்.முருகுமாறன்
- சீர்காழி தனி - ம. சக்தி
- பூம்புகார் - பவுன்ராஜ்
- நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
- வேதாரண்யம்- என்.வி.காமராஜ்
- மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
- திருவாரூர் - குடவாசல் ராஜேந்திரன்
- நன்னிலம் - ஆர்.காமராஜ்
- திருவிடைமருதூர் தனி - பாண்டியராஜன்
- கும்பகோணம் - இராம. ராமநாதன்
- பாபநாசம் - துரைக்கண்ணு
- திருவையாறு - ரத்தினசாமி
- தஞ்சாவூர் - ரங்கசாமி
- ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
- கந்தர்வக்கோட்டை தனி - ந.சுப்பிரமணியன்
- விராலிமலை - சி. விஜயபாஸ்கர்
- திருமயம் - பி.கே.வைரமுத்து
- ஆலங்குடி - கு.ப.கிருஷ்ணன்
- அறந்தாங்கி - மு.ராஜநாயகம்
- காரைக்குடி - சோழன் சித.பழனிச்சாமி
- திருப்பத்தூர் - ஆர். எஸ். ராஜகண்ணப்பன்
- மானாமதுரை தனி - ம.குணசேகரன்
- மேலூர் - ஆர்.சாமி
- மதுரை கிழக்கு - கே.தமிழரசன்
- சோழவந்தான் தனி -எம்.வி. கருப்பையா
- மதுரை வடக்கு - ஏ.கே.போஸ்
- மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு
- திருமங்கலம் - ம.முத்துராமலிங்கம்
- ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்செல்வன்
- போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
- ராஜபாளையம் - கே.கோபால்சாமி
- சாத்தூர் - ஆர்.பி.உதயக்குமார்
- சிவகாசி - கே.டி. ராஜேந்திர பாலாஜி
- அருப்புக்கோட்டை - வைகைச் செல்வன்
- பரமக்குடி தனி - எஸ்.சுந்தர்ராஜ்
- முதுகுளத்தூர் - மு.முருகன்
- விளாத்திகுளம் - ஜி.வி மார்க்கண்டேயன்
- தூத்துக்குடி - ஏ.பால்
- திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
- ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
- கோவில்பட்டி - கடம்பூர் செ.ராஜு
- சங்கரன்கோவில் தனி - சொ.கருப்பசாமி
- வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
- கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
- ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
- திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
- அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
- கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
- நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
- குளச்சல் - பி.லாரன்ஸ்
- கிள்ளியூர் - ஆர்.ஜார்ஜ்
முன்னதாக கூட்டணிக்குக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை லவட்டிவிட்டு, பின்னர் அவர்களது எதிர்ப்பால் அதில் பல தொகுதிகளைத் திருப்பித் தந்துவிட்ட அதிமுக, தனது வேட்பாளர் பட்டியலை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார் ஜெயலலிதா.
160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதா, அதில் இப்போது பல தொகுதிகளை மிரட்டல் விடுத்த
கூட்டணி கட்சிகளுக்கு தந்துவிட்டார்.
இதனால் முதலில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 160 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் புதிய அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.
ஆனால், தேமுதிகவுடன் சிக்கல் நீடித்ததால் இன்றாவது இந்தப் பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்ததது.
இது போக முதல் பட்டியலில் உள்ளவர்களில் யார் யார் பெயர் காணாமல் போகப் போகிறதோ.. யாருக்கு தொகுதி மாறப் போகிறதோ என்ற கவலையில் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலரும் ஆழ்ந்து போயிருந்தனர்.
இந் நிலையில் ஒரு வழியாக இன்று பிற்பகலில் புதிய பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். முதல் பட்டியலை தனக்கே தெரியாமல் மன்னார்குடி வகையறா தான் வெளியிட்டதாக கூட்டணிக் கட்சிகளுக்கு நொண்டி சாக்கு சொல்லி நகைப்புக்கு உள்ளானார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், இப்போதைய அதிமுக பட்டியலில் இடம் பெற்றுள்ள யாரும் மனு தாக்கல் செய்ய வேண்டாம். திங்கள்கிழமை புதிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த 11 மணி முதல் 1 மணி என்பது ஒரு ஜோசியர் குறித்துக் கொடுத்த நேரமாம்.
No comments:
Post a Comment